கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோயில் மாசிமகம் திருவிழா...
கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோயில் மாசிமகம் திருவிழா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோயில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் ஆயிரக்கணக்கான கிடாக்களை காணிக்கையாக பலியிட்டு வழிபட்டனர். பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள கெஜஹட்டி கணவாய் மலையில் அமைந்துள்ளது ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் திருக்கோயில்.
இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பௌர்ணமி நாளன்று மாசிமகம் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான விழா, நேற்றுமுன்தினம் மாயற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம், மஹா தீபாரதனையும், நேற்று பொங்கல் விழாவும் நடைபெற்றது. இதில் பெண்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.
மேலும், பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான கிடாக்களை பலியிட்டு காணிக்கை செலுத்தினர். அவர்கள் கோவில் வளாகத்தில் முகாமிட்டு அங்கேயே சமைத்து உறவினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்தனர். கோபி, அந்தியூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர்,சேலம், தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனி லாரி மற்றும் பேருந்து மூலம் கோயிலுக்கு வந்தனர்.
வனத்துக்குள் செல்லும் வாகனங்களை காராச்சிக்கொரை வனச்சாவடியில் வனத்துறையினரின் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மாசிமகம் திருவிழாவிற்கு மட்டுமே இக்கோயில் இமைந்துள்ள வனப்பகுதிக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
Leave a Comment