ஓம்சக்தி நாகத்தம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் 


குன்றத்தூர் அருகே ஓம்சக்தி நாகத்தம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பாரதியார் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஓம்சக்தி நாகத்தம்மன் ஆலயம் உள்ளது.சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது கிராம இளைஞர் முயற்சியால் மூன்று நிலை கோபுரங்களுடன் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.கடந்த 6 ஆம் தேதி கோ பூஜையுடன் துவங்கிய இந்த  கும்பாபிஷேக விழாவில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து மாக பூர்ணாதி மற்றும் கலச புறப்பாடு நடைபெற்றது.பின்னர் மேள தாளத்துடன் மந்திரங்கள் முழங்க  கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதேபோல் ஆலயத்தில் அமைந்துள்ள நாக விநாயகர், நாக முருகர் உட்பட பரிவார தெய்வங்களும் கும்பாபிஷேகம் நடைபெற்றன.

விழாவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment