இனியவை நாற்பது - கனிவுடன் பழகுவோர்க்கு (தினம் ஒரு திருக்குறள்)


குறள்:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு 

மு.வ விளக்க உரை: 
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை: 
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது. 

கலைஞர் விளக்க உரை: 
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை



Leave a Comment