தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருகல்யாண உத்சவம்


பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருகோவிலில் கல்யாண உத்சவம் நடைபெற்றது. மாசி உற்சவத்தின் போது நடைபெறும் இத்திருகல்யாணத்தை காண எராளமான பக்தர்கள் குவிந்தனர்.


வரலாற்று சிறப்புமிக்க 2000 ஆண்டு பழமையான திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் மாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி  கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருகல்யாண உத்சவம் நடைபெற்றது. 

இதில் கல்யாண கோலத்தில் கல்யாணசுந்தரரும், திரிபுரசுந்தரி தாயாருக்கும்  திருமண வைபவங்களான ஹோமம் வளர்த்தி, காப்பு கட்டி மாலை மாற்றி மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

திருகல்யாணத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்து  வந்த மக்கள் நேற்று இரவு முதலே கோவிலில் தங்கி காலை உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment