இனியவை நாற்பது - முகத்தால் விரும்பி (தினம் ஒரு திருக்குறள்)


குறள்:

    முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்

     இன்சொ லினதே அறம்

மு.வ விளக்க உரை:

முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

கலைஞர் விளக்க உரை:

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்



Leave a Comment