திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா 8-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை சாத்திக் கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களின் ஒன்றான மாசித்திருவிழா கடந்த மாதம் 28 - ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 8 -ம் திருநாளை முன்னிட்டு மூலவர்களில் ஒருவரும் உற்சவருமான சுவாமி சண்முகருக்கு பச்சைசாத்தி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவக்கொழுந்தீசுவரர் கோவிலுக்கு எழுந்தருளிய சுவாமி சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் , அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சைச்சாத்திக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து
அருட்பாலித்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த. ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசம் முழங்கினர்.
இந்த பச்சை கடைசல்ச்சப்பரத்தில் சுவாமி சண்முகர் மகாவிஷ்ணுவாக பச்சை சாந்தி கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதீகம்.
அதனைத் தொடார்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் எட்டு வீதிகளில் உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை ஆடைஅணிந்து பச்சை மாலைகள் மற்றும் பச்சை வஸ்திரம் சாத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8-ந் தேதி நடைபெறுகிறது.
Leave a Comment