தினம் ஒரு திருக்குறள் - 1


இனியவை நாற்பது

குறள் :

      இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

       செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

மு.வ விளக்க உரை:

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

கலைஞர் விளக்க உரை:

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்



Leave a Comment