திருமண தடையா? எளிய பரிகாரங்கள்
ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால் அது கடுமையான திருமண தோஷமாக கருதப்படுகிறது. இந்த தோஷம் இருந்தால்,எவ்வளவு முயன்றாலும் திருமணம் கை கூடுவதில் தடங்கல் இருந்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரலாம். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர தோஷம் விலகி திருமணம் கூடி வரும்.
ஜாதகத்தில் சிலருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடும். அவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வந்தால்,விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடியில் வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்தியை வணங்கினாலும் திருமண யோகம் உண்டாகும்.
ஜாதகத்தில் உள்ள தோஷங்களை தவிர தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் திருமணம் தடைக்கான காரணங்களாக சொல்லப்படுகிறது.
அதற்கான சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது, மாயவரம்-குற்றாலம் நெடுஞ்சாலையில் உள்ள திருமணஞ்சேரி. இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும் என்பது நம்பிக்கை.
Leave a Comment