அய்யா வைகுண்ட சுவாமி 188 வது அவதார திருவிழா
மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட சுவாமி 188 வது அவதார திருவிழா முன்னிட்டு சென்னை வண்ணராப்பேட்டையில் இருந்து மணலி புது நகர் வரை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அய்யாவின் அகில திரட்டு ஆகமத்தை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
சென்னை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் 188 வது அவதார திருவிழா வருடம் தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுகிறது.
இன்று காலை வண்ணாரப்பேட்டையில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார சாரட் வண்டியை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சபாபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார் அய்யா அருளி செய்த அகிலதிரட்டு ஆகமத்தை அலங்கரித்ததேரினை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்த அவதார நாள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதனால் தங்களின் துன்பங்கள் தீரும், வறுமைகள் அகலும், மனச்சுமை இறங்கும் நோய் நொடிகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிகையால் அய்யா வழி பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நெற்றியில் திருநாமம் இட்டு அய்யா உண்டு என்ற கோஷத்துடன் கொடியேந்தி மணலி புதுநகர் வரை 20 கிலோமீட்டர் தூரம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என குடும்பத்தினருடன் நடந்தே ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து கோவிலுக்கு சென்ற உடன் சந்தன குடமெடுத்தல், மாவிளக்கு ஏந்துதல் என அனைத்து நேர்த்தி கடன்களையும் அவதார நாளில் பக்தர்கள் நிறைவேற்றுவர்.
Leave a Comment