ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம்
கரூரில், முதல் முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற்றது.
இதற்காக ஐயப்பா சேவா சங்கம் சார்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீதேவி பூதேவி உடனாகிய வெங்கடேஸ்வரா பெருமாள் உற்சவர் சிலை கரூர் வந்தடைந்தது. அதன்பிறகு ஊர்வலமாக சென்று வெங்கட்ரமணா திருமண மண்டபம் அடைந்தது.
பிறகு இன்று காலை உற்சவருக்கு சுப்ரபாரதம் நடைபெற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான ஆலயத்தின் சார்பாக கலசங்கள் அமைத்து அதற்கு பூஜை நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு எண்ணைக்காப்பு சாத்தப்பட்டு, தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சள், சந்தனம் மற்றும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி பூதேவியுடன் ஆகிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி சுவாமிகளுக்கு புத்தாடை அணிவித்து அலங்கார மாலைகள் சாத்தப்பட்டது. பிறகு ஊஞ்சலில் சுவாமிகளை நின்ற திருமேனியில் கொலுவிருக்க செய்தனர்.
மேளதாளங்கள் முழங்க ஏழுமலையானுக்கு பல்வேறு வகையான பாடல்களை பாடி ஆடியபடி பட்டாச்சாரியார்கள் உற்சவர் களுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு பலவகை பிரசாதங்கள் வழங்கி கற்பூர தீபாராதனை நடைபெற்றது.
Leave a Comment