மேல்மலையனூர் தேர் திருவிழா....
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா வெகு விமர்சையாக கடந்த 22-ம் கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாசி பெருவிழாவில் மயான கொள்ளை தீமிதி போன்ற பெருவிழாக்கள் கொண்டாடப்பட்டது/ இதனைத் தொடர்ந்து ஏழாம் நாள் விழாவாக பிரம்மாண்ட தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது
இன்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், போன்றவற்றின் மூலம் அபிஷேகம் செய்து பின்னர் உற்சவர் அம்மனுக்கு ராஜராஜேஷ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.
ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பிற்பகல் உற்சவர் அங்காளம்மனுக்கு தீப ஆராதனை செய்து மேலதாளத்துடன் பம்பை உடுக்கை ஓசையுடன் வடக்குவாசல் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார தேரில் அம்மனை அமர வைத்தனர்.
பின்னர் பக்தர்கள் பக்தி பரவசத்தில் அங்காளம்மா தாயே அருள் புரிவாயே என பலத்த கோஷத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோயிலை சுற்றி வலம் வந்த பாடை தேரில் ஆக்ரோஷமாக அமர்ந்திருந்த அம்மனை தேவர்கள். ரிஷிகள் அமர்ந்து அம்மனை சாந்தப்படுத்தவே இவ்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருத்தேரின் மீது பக்தர்கள் பழங்கள். காய்கறிகள் நவதாணியங்கள். சில்லரைகளை போட்டு தங்கள் நேர்த்திகடனை நிவிர்த்தி செய்தனர். மாசி பெருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து இருந்தனர். பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்
Leave a Comment