திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசமிட்டனர். மார்ச் 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனை தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கும்ப லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசமிட்டனர்.
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவான வரும் 8ம் தேதி மாசி திருவிழா தேரோட்டமும் நடக்கிறது.
Leave a Comment