இருள் நீக்கி வாழ்வை ஒளிமயமாக்கும் தீப வழிபாடு


தீபம் புற ஒளியினை மட்டும் தருவதில்லை. தீபத்தினை வழிபடும் பொழுது வழிபடுபவரின் ஆன்ம ஒளியும், ஞான ஒளியும் கூடுகின்றது. ஏனெனில் தீபம் அதாவது அக்னி இருள், அழுக்கு இரண்டினையும் நீக்கி பரவி அனைத்தையும் தன் மயமாகவும், ஒளி மயமாகவும் ஆக்கி விடும். ஆகவேத்தான் நம் முன்னோர்கள் சூரியன், சந்திரன், அக்னியை வழிபட்டு வந்துள்ளனர்.

கோவில்களில் அணையா விளக்குகள் ஏற்றி வைப்பர். சுற்று விளக்கு, லட்ச தீபவிளக்கு என்று தீபத்தினை ஏற்றி போற்றி வழிபடுவர். வீடுகளில் அன்றாடம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவர். வீட்டுக்கு வரும் மருமகளை ‘விளக்கேற்ற வந்தவள்’ எனப் போற்றுவர்.

உதிரிப் பூக்களை பக்கெட் நீரில் நன்கு கழுவி எடுத்து சுத்தமான துணியில் ஒற்றி எடுப்பது நல்லது. அது போன்று தீபம் சுடராய் இருக்க வேண்டும். திகு திகுவென்று கட்டுங்கடங்காமல் தீபம் எரியக்கூடாது. பொதுவில் ஸ்லோகங்கள் சொல்லும் பொழுது ஓரிரு கிராம்பு அல்லது ஏலக்காய் மென்று விழுங்கிதான் இறைவனின் நாமங்களைச் சொல்லுவர். ஏனெனில் சொல்லும் வாய் கூட நல்ல மணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இதன் கருத்து.

தீபத்தினை தூண்டி விட சிறிய வெள்ளிக் குச்சியினையோ அல்லது சுத்தமான சிறிய இலையின் காம்போ உபயோகிக்க வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது பின் வாசல் கதவை மூடி வைக்க வேண்டும். முன் வாசல் கதவை திறந்து வைக்க வேண்டும். வேண்டுதல் முடிந்த பிறகு கற்பூர ஆரத்தியோ, நெய் தீப ஆரத்தியோ காண்பிக்க வேண்டும்.



Leave a Comment