அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொல்லை 


சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் 800 ஆண்டு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவிலில் வெகு சிறப்பாக  மசான கொல்லை நிகழ்ச்சி நடைபெற்றது.  

மாசி மாத சிவராத்திரி அடுத்து அமாவாசை நாளில் மசானக் கொல்லை    நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கத்தில் ஒன்று அனைத்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் உடுக்கை பம்பை சிலம்ப்பாட்டத்துடன்  அம்மன் வேஷங்கள் இட்டு உக்கிரகமாக ஆடி ஊர்வலமாக சென்று  சென்று சூறையாடுவதாக ஐதீகமாக கொண்டாடி வருகிறார்கள் .  

சிவபெருமான் தன் சக்தியை இழந்து பல சோதனைகளுக்கு ஆளான போது அம்மன் அங்காள பரமேஸ்வரி உருவெடுத்து  18 பரிவாரங்களுடன்  மயானத்தில் அசுரனை வதம் செய்யும் மயான கொல்லை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 

எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வாசலில் அனைத்து காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்களால்  அலங்கரிக்கபட்டு அசுரன் உருவம் செய்து வைத்து அம்மன்  வேடமிட்டு   ஆவேசத்துடன் ஓடி வந்து  அசுரனை வதம் செய்து காய்கறிகளை சூறையிட்டனர்.



Leave a Comment