ஊதுவத்தியை ஊதி அணைக்கலாமா?
பொதுவில் கற்பூரம், ஊதுவத்தி இவற்றினை விளக்கின் தீபத்திலிருந்தே ஏற்றுகின்றனர். இது மிகவும் தவறானது. விளக்கினை ஏற்றவும், கற்பூரம், ஊதுவத்தி இவற்றினை ஏற்றவும் தீபக்கால் என்ற தனி விளக்கினை பயன்படுத்துங்கள்.
நெருப்பு குச்சி, ஊதுவத்தி என எந்த அக்னியையும் வாயால் ஊதி அணைக்காதீர்கள். அது மிகத் தவறானது. விளக்கேற்றி, பூ சாற்றி, ஊது வத்தி காண்பித்து உங்களால் முடிந்த நைவேத்தி யங்களை வையுங்கள்.
நைவேத்தியம் செய்யும் பொழுது மணி அடிக்க வேண்டும். சுத்தமாக கழுவிய கிழியாத வெற்றிலை, கொட்டை பாக்கு நன்கு கனிந்த கழுவிய பழங்கள் போன்றவை வழக்கத்தில் இருப்பவை. கோவிலிலும் சரி வீட்டிலும் சரி பூஜைக்கு தேங்காய் உடைப்பது ஐதீகம். தேங்காய் இறைவனுக்குத் தன்னையே சமர்ப்பிப்பதற்குச் சமம். மன அகங்காரத்தினை உடைப்பதற்குச் சமம். தேங்காயில் அனைத்தும் சுத்தமானது உபயோகப்படுவது சிறிதளவு தேங்காயே அதிக ஊட்டச்சத்தினைத் தருவது.
இதன் காரணமே விசேஷ நாட்களில் தேங்காய் வைத்துக் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அத்தகைய தேங்காய் கண்ணுக்கு மேல் உச்சி தவிர நன்கு நாசினை உரித்து எடுத்து விடுங்கள். தேங்காயை நன்கு கழுவி தேங்காய் வெட்டு கல்லில் முறையாய் உடையுங்கள். இளநீரை நைவேத்தியத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதும் நார் இல்லாமல் எடுக்க வேண்டும். ஏனோ தானோ என்று பிய்ந்த நாருடன் தேங்காயினை நைவேத்தியம் செய்யாதீர்கள்.
பாயாசம், வடை போன்ற நைவேத்தியங்களை சுட சுட சுகாதார முறையில் கொடுங்கள். அதே போன்று பூக்களை நீண்ட காம்புகளுடன் வைக்காதீர்கள். மாலை போல் அணிவித்தால் சாமி படங்களின் கண்களை மறைக்காது இருக்க வேண்டும். விளக்கிற்கு சுற்றி விடலாம். விளக்கை சுற்றி அலங்கரிக்கலாம்.
Leave a Comment