மகா சிவராத்திரி அன்னதான பெருவிழா...
மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் கல்யாண மண்பத்தில் அன்னதான பெருவிழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் வருகிற சிவராத்திரியே சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இதையே மகா சிவராத்திரி என்று போற்றுகிறோம்.
எனவே, மகா சிவராத்திரி நன்னாளில் விரதம் இருந்து சிவனாரைத் தரிசித்தால் சகல வளங்களும் பெறலாம். முக்தி அடையலாம். மகாசிவராத்திரிக்கு முதல்நாளான திரயோதசி அன்று ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம் மேற்கொள்ளவேண்டும். இயலாதவர்கள், வயதானவர்கள், எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். விரதம் கடைப்பிடிக்க இயலாதவர்கள் பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
மறுநாள், சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில் நான்கு ஜாமங்களில் நான்கு கால பூஜைகளை தரிசிக்கலாம். அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு சிவபாராயணம் செய்யலாம். ருத்ரம் பாராயணம் செய்யலாம்.
மகா சிவராத்திரி அன்று முடிந்த அளவு, ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்வது மகா புண்ணியம் என்கின்றன சாஸ்திரங்கள்.
இதன்படி சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் கற்பாம்பாள் கல்யாண மண்டபத்தில் மகாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. பக்தர்கள், மகா சிவராத்திரி அன்னதான விழாவில் கலந்து கொள்ளுமாறு விழா குழுவினரின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Leave a Comment