சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் தெப்ப உற்சவம்


சோளிங்கர் யோக நரசிம்மர் சாமி கோவிலில் தெப்ப உற்சவம்  வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்...

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கடிகை என அழைக்கப்படும்  ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் தை மாதம் மூன்றாவது வாரம்  தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து காலையில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது. 

மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் பக்தோசித பெருமாள் மாட வீதிகள் வழியாக தெப்ப உற்சவம் நடைபெறக்கூடிய தக்கான் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருளினார் அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வண்ண மின் விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இதில் சோளிங்கர் மட்டுமின்றி சுற்றி இருக்கின்ற கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்



Leave a Comment