ஸ்ரீ முனியனார் சுவாமி கோவிலில் லட்சதீப விழா.... 


சிதம்பரம் அருகே சேந்திரக்கிள்ளை ஸ்ரீ முனியனார் சுவாமி கோவிலில் 74 ஆவது ஆண்டு லட்சதீப விழா விமர்சையாக நடைபெற்றது.  கோவிலைச் சுற்றி ஒரு லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். 

சிதம்பரம் அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனியனார் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று லட்ச தீப பெருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு 74 வது ஆண்டு லட்சதீப பெருவிழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ முனியனார் சுவாமி, ஸ்ரீ பொன்னியம்மன் சுவாமிக்கு  ஆராதனை நடந்த பிறகு லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டது

இதையொட்டி காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியனார் சுவாமி கோவிலைச் சுற்றி ஒரு லட்சம் தீபங்களை ஏற்றி கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். கோயிலுக்குள் செல்லும் சாலையின் இருபுறங்களிலும், கோவிலுக்கு முன்பாகவும் அழகாக தீபங்கள் ஏற்றியும், மரங்களின் மீது விளக்குகளை பொருத்தியும் பக்தர்கள் வழிபட்டனர். 

சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோயிலுக்கு வந்து சுவாமிகளை வழிபட்டு அருள் பெற்றனர். 
 



Leave a Comment