வடலூரில் ஜோதி தரிசனம்....


வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தை பூசத்தை முன்னிட்டு  7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.  தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர். 
 
வடலூர் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார்.  வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். இதனை தொடர்ந்து தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் படி  வடலூரில் வள்ளலார்  நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைபூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும். அதன்படி  இன்று காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி  தரிசனம் துவங்கியது. ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த  பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.  

இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கும், பிற்பகல் 1 மணிக்கும்  தொடர்ந்து இரவு 7 மணிக்கும், ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். 



Leave a Comment