பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார் .... 450 ஆண்டுகளாக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்
தைப்பூச விழாவுக்கு பழனி முருகப்பெருமானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் பழனி மலைக்கு 450 ஆண்டுகளாக காவடியுடன் வரும் நகரத்தார் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, காவடிகளை சுமந்து நடைபயணமாகவே இவர்கள் செல்கின்றனர். காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, காண்டனூர் உட்பட 96 ஊர்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட நகரத்தார் காவடிகள் பழநிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஆண்கள் மட்டுமே காவடி சுமந்து செல்கின்றனர். பழநி சென்று திரும்பும் வரை வாகனங்களை பயன்படுத்துவதில்லை. நடந்தபடியே காவடிகளை சுமக்கின்றனர். 40 நாட்கள் விரதமிருந்தே காவடியைச் சுமப்பர். மயில்தோகை வைத்து அலங்கரித்து, அழகு வடிவில் காவடிகள் காட்சியளிக்கின்றன. செல்லும் ஊர்களில் எல்லாம் இவர்களுக்கு போட்டி போட்டு பொதுமக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
காரைக்குடியை சேர்ந்த அரண்மனை பொங்கல் குடும்பத்தார் மற்றும் சாமியாடி தலைமையில் காவடிகள், பக்தர்களோடு புறப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. முதலில் அனைத்து காவடி பக்தர்களும் காரைக்குடியை சுற்றி நகர் வலம் செல்லும்.
இக்காலத்தில் நகரம் முழுக்க ஆன்மிகம் மணக்கும். தொடர்ந்து, நகரத்தார் காவடிகள் பழநிக்கு கிளம்பும். தைப்பூசத்தின் முதல் நாள் பழநியை சென்றடையும். பூசத்தின் மறுதினமும் தங்கி பழநி முருகனுக்கு காவடிகளை செலுத்திவிட்டு மீண்டும் நடைபயணமாகவே வருவது நகரத்தாரின் தனிச்சிறப்பாகும்.
வரும்போது குன்றக்குடி வரை அனைத்து காவடிகளும் வந்து சேர்ந்தவுடன், மஹேஸ்வர பூஜைக்கு பிறகு அவரவர் தங்கள் சொந்த ஊர் திரும்புவோம். இது 450 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ஒரு பண்பாட்டு ஆன்மிக அடையாளமாக இருக்கிறது’’ என்றார்.
Leave a Comment