திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய தேர் திருவிழா
திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திரு தேர் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று.இதில் 26 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருந்திருவிழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
7 வது நாளான இன்று தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கருமாரியம்மன் அமர்ந்து காட்சி அளித்தார்.இந்த தேரை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிர் வேட்டுகள் முழங்க ஓம் சக்தி என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஊர்வலத்தில் மயிலாட்டம்,ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,தாரை என பல்வேறு கிராமி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Leave a Comment