தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கியது 


தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. 8 வது யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதன்பின் மகாபூர்ணஹதி பூஜை, ஹோமம் நடைபெறும். பல மாவட்டங்களில் இருந்து குடமுழுக்கு விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்துள்ளனர்.

பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும். இந்த விழாவில் இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளது. இதில் ஒரு கோபுரம் ராஜ கோபுரம் ஆகும்.

காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது. பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டு மொழியில் குடமுழுக்கு நடக்கிறது.

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் குடமுழுக்கு நடக்கிறது. இதனால் இந்த விழா அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
 



Leave a Comment