கும்பாபிஷேகத்தின் வகைகள்


ஆவர்த்தம் 
 ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

அனாவர்த்தம் 
 பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

புனராவர்த்தம் 
கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

அந்தரிதம் 
கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சாந்தி.
கோயிலில் குடமுழுக்கு நடைபெறும் அன்றே கலந்து கொள்வது உத்தமம். 48 நாட்களுக்குள் ஆலயத்தை தரிசிப்பது குடமுழுக்கு செய்ததால் ஏற்பட்ட புதிய சக்தியை நாம் உள் வாங்க கூடிய ஒரு வாய்ப்பாகும்.



Leave a Comment