கோவிலில் குடமுழுக்கு செய்வதன் காரணங்கள் என்ன? 


புதிதாக ஒரு ஆலயம் கட்டி முடித்தபின் குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம் செய்வித்தல் என்பது ஒரு வழக்கம். மேலும் கோவிலுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். 

பொதுவாக ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்கள் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ள ஒரு முறையாகும்.

ஏனென்றால் பெருவாரியான மக்கள் உள்ளே வந்து சொல்லும்பொழுது கோவிலில் சக்தி மூலம் அது நாளுக்கு நாள் தேய்ந்து வரும். ஒவ்வொரு கோவிலும் தினசரி பூஜை முறை என்று வழக்கத்தில் உண்டு அவை மூலம் இழந்த சக்தியை அன்றாடம் சுத்திகரித்து நிலைநிறுத்தும் ஒரு வழிமுறையாகும். அப்படி செய்தபோதும் 12 வருடத்தில் அதன் சக்தி குறைந்துவிடும்.

குறைந்த சக்தியை புதுப்பித்து சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருப்பின் அவைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு புதிதாக சக்தி அந்த கோவிலுக்கு ஊட்டப்படும்.

குடமுழுக்கின் போது கோவிலில் கலசத்தில் நிரப்பப்பட்டுள்ள தானியங்களை மாற்றம் செய்வர். கோவில் கோபுரங்கள் இடி தாங்கியாக ஒருவகையில் செயல்பட்டாலும், இன்னொருபுறம் வரகு அரிசி போன்ற தானியங்கள் அடுத்த 12 வருடங்களுக்கு கோபுர கலசத்தில் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

பஞ்சம் அல்லது இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் கோபுர கலசத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை எடுத்து பயிரிட்டு மறுபடியும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒரு வாய்ப்பாக ஏற்படுத்தியுள்ளார்கள்.
 



Leave a Comment