தஞ்சை குடமுழுக்குக்குச் செல்ல 500 சிறப்பு பேருந்துகள்....
குடமுழுக்குக்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோயிலில் விஐபிக்களுக்கு தனியாக 9அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நின்று குடமுழுக்கை பார்க்கும் பக்தர்களுக்காக கோயிலை சுற்றிலும் மிகப்பெரிய திரை கொண்ட எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டு உள்ளன. டிஜிபி திரிபாதி ஆய்வு: குடமுழுக்கைெயாட்டி நகரில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடம், கூட்ட நெரிசலை நெறிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இப்பணிகளை நேற்று டிஜிபி திரிபாதி ஆய்வு செய்தார். பாதுகாப்பு விவரங்கள் குறித்து மத்திய மண்டல் ஐஜி அமல்ராஜ், டிஐஜி லோகநாதன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், குடமுழுக்கை காண சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு வரை 500 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 5ம்தேதி உள்ளூர் விடுமுறை: குடமுழுக்கை முன்னிட்டு இப்போதே தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குடமுழுக்கையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment