தஞ்சையில் விழாக்கோலம்... பெரிய கோயில் நாளை குடமுழுக்கு 


தஞ்சை பெரியகோயில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. குடமுழுக்கு யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி மாலை தொடங்கியது. இதற்காக வெண்ணாற்றங்கரையில் இருந்து கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. 

11,900 சதுரஅடி பரப்பில் 110 யாக குண்டங்கள் யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ளது.  400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் கலந்து கொண்டு ஹோமம் நடத்தி வருகிறார்கள். நாளை காலை 7 மணிக்கு மகா தீபாராதனையும், காலை 7.25 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்த விமான ராஜகோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறும். 

 8 கால யாகசாலை பூஜைக்கும் ஆயிரம் கிலோ வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரி காய், கர்சூரிக்காய், அதிமதுரம், லவங்கப்பட்டை, தேவதாருகட்டை போன்ற 124 மூலிகை பெருட்களை பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தினந்தோறும், ஆயிரம் கிலோ அளவிலான செவந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா போன்ற மலர்களும் அபிஷகேத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 
 



Leave a Comment