திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம்... வீடியோ காட்சி
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் இரண்டாவது நாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத பார்த்தசாரதி தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கி 8-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தெப்பல் உற்சவத்தையொட்டி தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்தி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளனர்.
தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று கோதண்டராமசுவாமிக்கு முத்து கவச அலங்காரத்தில் , தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து ஜீயர்கள் முன்னிலையில் தெப்பத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். . இரண்டாவது நாளான இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பார்த்தசாரதி சுவாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் அருள் பாலித்தார், தெப்பல் உற்சவத்தின் மூன்றாவத் நாளான 4-ந் தேதி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியும், 5-ந் தேதி கிருஷ்ணருடன் ஆண்டாள் தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 6,7,8 ஆகிய தேதிகளில் உற்சவர் கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தெப்ப குளத்தில் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அன்னமய்யா மற்றும் தாச சாகித்தியா திட்டத்தின் சார்பில் பஜனை, ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் துணை செயல் அலுவலர் வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Leave a Comment