திருவிழாவுக்கு தயாராகிறது திருப்பரங்குன்றம் தெப்பக் குளம்....


தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணிகள் மற்றும் தெப்பக் குளத்தை சுற்றி வர்ணம் பூசும் பணிகள் மற்றும் வேலைப்பாடுகள் மிக தீவிரம்.

வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி தைப்பூசத் திருவிழா அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் ஆலயங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது.

அந்த வகையில் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 26ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற தைப்பூசத்தன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு தப்ப குளத்தில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சுவர்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெறும் வகையில் வேலைப்பாடுகளும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது.

தைப்பூச தெப்பத் திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை சார்பாக திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.



Leave a Comment