காரைக்கால் மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.... 


காரைக்கால் மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

காரைக்காலில் பிரசித்தி பெற்ற  மணக்குள விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. 

காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கிய யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்று மாலை 4 மணிக்கு முதல்கால பூஜை முடிவடைந்து. இன்று அதிகாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை முடிவடைந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து காலை 9.45 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களை வாத்தியங்கள் முழங்க  சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலின் கோபுரங்களுக்கு  கொண்டு சென்று வைத்தனர் .      

அதன்பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர்   மூலஸ்தானத்திற்கான மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது .இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காரைக்கால் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மணக்குள விநாயகரை வழிபட்டனர்.
 



Leave a Comment