தஞ்சை பெரிய கோயிலில் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது.....
40 அடி உயர பர்மா தேக்கு மரத்தில் தயாரான புதிய கொடிமரம் தஞ்சை பெரிய கோயிலில் நிறுவப்பட்டது.
உலகப் பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பெரிய கோயிலை புனரமைக்கும் பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பெரிய கோயிலில் பெருவுடையாரை நோக்கி நிற்கும் பழைய கொடிமரம் பழுதானதையடுத்து 40 அடி உயரத்திலான பர்மா தேக்கு மரத்தில் கொடிமரம் செதுக்கப்பட்டு இன்று சிறப்பு பூஜைகளுடன் நிலை நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பூர்வாங்கப் பூஜை களுடன் குடமுழுக்கு பூஜைகள் துவங்கின. பெரிய கோயில் குடமுழுக்கிற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரி மாணவர்கள் தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள அரசு சுவர்களில் தெய்வ திருமேனி உருவங்களை வண்ண வண்ண ஓவியங்களாக மாணவர்கள் தீட்டி வருகின்றனர்.
Leave a Comment