திண்டுக்கல் சனி பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா....
திண்டுக்கல்லில் 120 வருடங்கள் பழமையான சனி பகவான் கோவிலில் நடை பெற்ற பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்0.
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான வழக்கமாக கருதப்படுவது சனி கிரகம் ஆகும் சனிபகவான் கொடுப்பதையும் எடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது அப்பேர்பட்ட சனி பகவான் 2,1/2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 24.01.20 பெயர்ச்சியானார் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் 120 வருடங்கள் பழமையான சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது.
தமிழகத்திலேயே திண்டுக்கலில் தான் சனிபகவான் என்று தனியாக கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இங்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் இன்று காலை 9 : 57 மணி அளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து சனி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது பெயர்ச்சியான நேரத்தில் சனி பகவானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து சனிபகவானை வழிபட்டு பெற்றுச் சென்றனர்.
Leave a Comment