சூரியனார் கோயில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றம்.....


சூரியன் தனிக்கோயில் கொண்டுள்ள சூரியனார் கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் ரதசப்தமி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தமிழகத்தில் சூரியன் மூலவராகவும் ஏனைய கோள்கள் பரிவார தேவதைகளாக விளங்கும் ஒரே கோவிலான கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவிலில் இன்று ரதசப்தமி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது .

11 நாட்கள் நடைபெறும் இவ் விழாவின் முக்கிய நிகழ்வான சூரிய தேவன் திருக்கல்யாண உற்சவம் எதிர்வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சூரியதேவன் ராஜ அலங்காரத்துடன் உஷா தேவி சாயா தேவி உடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இவ்வாலய மூலவரை வழிபட்டால் காலசர்ப்பதோஷம் ,களத்திர தோஷம் ,பித்ரு தோஷம் ,புத்திர தோஷம், திருமண தடை போன்றவை விலகும் என்ற ஐதீகம் இப்பகுதி மக்களிடையே உள்ளது. 
 



Leave a Comment