அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீப மை பக்தர்களுக்கு விநியோகம்....
அண்ணாமலையார் திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது கடந்த டிசம்பர் பத்தாம் தேதி மாலை விமர்சையாக மகா தீபம் ஏற்றப்பட்டது.
அன்றிலிருந்து தொடர்ச்சியாக பதினோரு நாட்கள் அண்ணாமலையார் தீப மலையின் மீது ஜோதி ஸ்வரூபமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தீபக் கொப்பரையில் பதினோரு நாட்கள் ஏற்றப்பட்ட தீப மையானது கடந்த ஆருத்ரா தரிசனத்தின் பொழுது, அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜப்பெருமானுக்கு தீப மையானது வைக்கப்பட்டது. பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீபமை வினியோகிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உக்கிரானம் என்னுமிடத்தில் தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட நெய்யில் வாசனை திரவியங்கள் மற்றும் அண்ணாமலையார் மீது அபிஷேகம் செய்த அபிஷேக விபூதி கலந்து பதப்படுத்தி கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் கோயில் ஊழியர்கள் திருக்கார்த்திகை தீப மை பிரசாதங்களை தயாரித்து பேக் செய்து, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்கு பிரசாதமாக தீபமே வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. மேலும் திருக்கார்த்திகை தீப மையானது திருக்கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
Leave a Comment