அஷ்டபந்தனம் என்றால் என்ன? எப்படி செய்யப்படுகிறது...


பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலைக்கு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டு வருகிறது. கோவில் அமைவிடம், பூஜைகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆகமவிதிமுறைகள் இருக்கின்றன. பொதுவாக கோவிலை கட்டி முடித்த பிறகு, சிலை பிரதிஷ்டை செய்யப்படும். ஒரு பீடத்தின் மீது சிலையை வைக்கும்போது அது, அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற 8 விதமான பொருட்கள் கலந்த மருந்து சாத்தப்படும். 

அந்த மருந்து, சிலையை பீடத்துடன் அழுத்தமாக இணைத்து பிடித்துக்கொள்ளும். அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் ஆகிய 8 பொருட்கள் தேவைப்படுகின்றன. 

இந்த 8 பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு குறிப்பிட்ட பதம் வரும்வரை இடிக்கப்படும். மருந்துகளை கலந்து இடிக்கும் உரல், உலக்கை வைக்கும் பாத்திரங்கள் ஆகியவை தூய்மையாக இருப்பதுடன், அவற்றை தயாரிப்பவர்கள் உடல் மற்றும் மன தூய்மையோடும், இறை சிந்தனையோடும் இருக்க வேண்டும். மேலும் பொருட்களின் அளவு, இடிக்கும் நேரம் ஆகியவையும் ஆகம விதிப்படி கடைபிடிக்கப்படுகிறது.



Leave a Comment