ஆற்று திருவிழா கோலாகலம்....


கடலூரில் ஆற்றுதிருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  பூக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் மக்களை கவர்ந்தது.

பொங்கல் பண்டிகையின் 5ம் நாள் திருவிழாவான பெண்ணையாற்று திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் பெண்ணையாற்றில் அதிகாலை முதலே கடலூர்  வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம்,  பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம்  உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள்  அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. 

சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து  ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதில் அனைத்து சுவாமிசிலைகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் மக்களை மிகவும் கவர்ந்தது.  

ஆற்றுத் திருவிழாவையொட்டி பெண்ணையாற்றில் ஏராளமான கடைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தது. 

 கடலூர் மற்றும் புதுச்சேரி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றுத் திருவிழாவில்  குடும்பத்தோடு கலந்து கொண்டு சாமிகளை பக்தியுடன் வழிபட்டனர். 

முன்னோர்களை நினைவுகூரும் வகையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் சிறுவள்ளிக் கிழங்கு அதிகளவு விற்பனையானது. 

ஆற்றுத்திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் முக்கிய பொருளான சிறுவள்ளி கிழங்கு ஒரு கிலோ ரூ.30 என அதிகளவு விற்பனை செய்ததை பொதுமக்கள் விரும்பி வாங்கிச்சென்றனர்.
 



Leave a Comment