எல்லாம் சிவன் சொத்து
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமந்திரம் எளிய விளக்க உரை - 3
போற்றிசைத் தும்புகழ்ந்தும் புனிதன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக்கே செல்வ
மாற்றிய தென்று மையலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னி நின்றானே.
(திருமந்திரம் - கடவுள் வாழ்த்து)
சிவனைப்
போற்றித் துதித்து இசைத்துப் பாடி புகழ்ந்து வியந்து வாழ்த்திடுவீர்.
அவனின்
புனிதத் திருவடியை மனத்தில் பற்றி கிஞ்சிற்றும் விலகாமல் உறுதியாக நிற்பீர்.
ஒரு நாளும்
மறவாது
இவ்விதம்
அவனுடனேயே இணைந்து
இருந்திடுவீர்.
இவ்வித மெல்லாம் இருந்தாலும்...
சேர்த்த
செல்வமெல்லாம் அவன் தந்ததே
என்று உணர்ந்து சிவனுக்கே
அது உரியது
என தெளிந்து
சிவசேவை
எனும்
தானதர்மங்கள் செய்து
புண்ணியம் சேர்த்திடுவீர்.
ஈட்டிய செல்வம்
எல்லாம்
உமக்கே உரியது
என மயங்கி விடாது சிந்தையைத் தெளிவாக மாற்றி...
'அனைத்தும் அவன் சொத்து '
என்று உணர்ந்து
அவன் திருவடியைப் பற்றி நிற்போர்க்கு
அவன்
வழி காட்டுவதோடு அவர்களோடு
கலந்து நிற்பான்.
'எல்லாம் அவன் செயல் ' என்றிருப்போரை
ஒன்றிக்
காத்தருள்வான்.
Leave a Comment