திருவலங்காடு ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா அபிஷேகம்... வீடியோ காட்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு அருள்மிகு ஸ்ரீ வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், விருட்சமான ஆலமரத்தின் கீழ், உற்சவர் நடராஜபெருமானுக்கு, 34 வகையான பழங்களால் அபிஷேகம் நடந்தது. பின், அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் கோவில் வளாகத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோபுர தரிசனம் நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழகம் ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் காத்திருந்து மூலவர் நடராஜப் பெருமானையும் வழிபட்டனர் தொடர்ந்து பக்தர்கள் ஆருத்ரா அபிஷேகத்தை பார்க்கும் வகையில், நிழற்குடை பந்தலும், வண்ண தொலைக் காட்சிகள் அமைத்திருந்தனர். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Leave a Comment