சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம்.... வீடியோ காட்சி


சிதம்பரம் நடராஜர் கோயிலில் முக்கிய விழாவான ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும். 

இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா மற்றும் பிச்சாண்டவர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக ஆருத்ரா தரிசனம் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கதனர். 



Leave a Comment