உள் நின்று அருள்பவன்
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமந்திரம் எளிய விளக்க உரை - 2
மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்
நினைத்த தறிவெனில் தான் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம்பேணி நின்றானே.
(திருமந்திரம் - கடவுள் வாழ்த்து)
மனித உள்ளம்
ஒரு கோயில்.
அதில்
உறைந்து
மறைந்து நின்று
திருவிளையாடல்கள் புரிபவன்
இறைவன்.
ஒருவர்
தன்னை அறிவதே அவனை
அடையும் வழி.
அவனை
நினைவிலே
நினைந்து நினைப்பவரே அறிவால் உணரமுடியும்.
இதை அறியாத உலகோர் தன்னைத்தான் அறிவதும் இல்லை.. அவனை நினைப்பதும் இல்லை...
இதுபற்றி பிறர் சொல்லிக் கேட்பதும் இல்லை.
அதனால் தான் பெரும்பாலானோர்
எப்போதும் துன்பம் என்னும் இருளில் வாடி
'இறைவன்
என்னிடம்
அன்பு இல்லாதவனாக இருக்கிறான் '
என புலம்புவர்.
இறைவனோ
இவ்வுலகில் இறவாமல் பிழைத்திருக்கும் உபாயம்
அறிந்தவர் பக்கமே எப்போதும் இருக்கிறான்.
அத்தகையவர்
' உள் 'ளேயே
உள் நின்று
அருள் தருகிறான்.
Leave a Comment