திருத்தணி முருகன் கோயிலில் நாளை திருப்படி திருப்புகழ் விழா
புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில், நாளை காலை 8 மணி முதல் திருப்படி திருப்புகழ் திருவிழா தொடங்கி, மறுநாளான ஜனவரி 1 ஆம் தேதி தேதி காலை வரை தொடா்ந்து திருப்புகழ்பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒரு வருடத்தை குறிக்கும் விதமாக திருத்தணி முருகபெருமான் கோயிலில் 365 திருப்படிகள் உள்ளன. ஆங்கில புத்தாண்டு தொடங்கும் நாளுக்கு முதல் நாள் இங்கு படிப்பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடப்பாண்டுக்கான திருப்படித் திருவிழா நாளை காலை 8 மணிக்கு சரவணப்பொய்கை அருகே திருப்படி பூஜையுடன் தொடங்குகிறது. அப்போது பஜனை குழுவினரை வரவேற்று பக்தி பாடல் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.
தொடா்ந்து, நூற்றுக்கணக்கான பஜனை குழுவினா், மறுநாள் ஜனவரி 1-ஆம் தேதி காலை வரை தொடா்ந்து பக்தி பாடல்களைப் பாடியவாறு மலைக் கோயிலுக்குச் சென்று வழிபடுவா். மேலும், 31-ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு உற்சவா் வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதியில் திருவீதியுலா வருகிறார்.
ஜன.1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும், இரவு 8 மணிக்கு உற்சவா் வெள்ளி நாக வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.
Leave a Comment