ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் துவங்கியது


திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதியில் பச்சை பரப்புதல் வைபவ நிகழ்ச்சி கோயிலுக்கு எதிர்புறம் உள்ள ஆண்டாள் பிறந்த இல்லத்தில் நடைபெறும். நிகழ்ச்சியின்போது ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் தன் பிறந்த இல்லத்திற்கு வருவது வழக்கம். நேற்று பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றதால் கோயில் முன்புறமுள்ள ஆண்டாள் பிறந்த வீடு பல அழகிய வேலைப்பாடுடன் பந்தல் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வீட்டின் முன்புறம் பச்சை நிறம் உடைய அனைத்து காய்கறிகளும் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆண்டாள் பிறந்த வீட்டில் ஆண்டாளுக்கு மிகவும் பிடித்த அக்காரவடிசல், மணி, பருப்பு, திரட்டுப்பால் ஆகியவையும் செய்து வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பிறந்த இல்லத்திற்கு ஆண்டாள் கோயிலில் இருந்து ரெங்கமன்னார் உடன் சர்வ அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். 

பின்னர் வீட்டின் முன்புறத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த பச்சை நிற காய்கறிகளை ஆண்டாள் பார்வையிட்டார். வீட்டின் முன்புறம் ஆண்டாளுக்கும், ரங்கமன்னாருக்கும் தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழா நிறைந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமாக பச்சை காய்கறிகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியையடுத்து நேற்று முதல் பகல்பத்து நிகழ்ச்சி தொடங்கியது.
 



Leave a Comment