ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்...
ஜம்மு காஷ்மீர் மற்றும் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி, மும்பை ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் சம்பிரதாய முறைப்படி ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் எத்தனை பக்தர்களை முடிந்த அளவிற்கு சுவாமி தரிசனம் செய்து வைத்து பரமபத வாயில் வழியாக அனுமதிக்க முடியுமோ அவ்வளவு பக்தர்களை அனுமதிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தேவஸ்தான பட்ஜெட் 3116.25 கோடி ரூபாயில் இருந்து 3243.19 கோடி ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதில் உண்டி மூலமாக 1231 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனை 1285 கோடி ரூபாயாகவும், பிரசாத விற்பனையின் மூலம் 270 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 330 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 30 கோடி ரூபாயில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தொகுதியான அங்கு ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Leave a Comment