திருமணத்தடை நீக்கும் ஹோமங்கள்...... 


கந்தர்வ ராஜ ஹோமம் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி செய்யப்படும் ஹோமமே கந்தர்வ ராஜ ஹோமம் ஆகும். இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பங்கேற்கும் நபர்களுக்கு கலசாபிஷேகமும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.

சுயம்வர கலா பார்வதி ஹோமம் :

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது திருமணம் ஆகும். அந்த திருமண நிகழ்வு பல தோஷங்களால் தடைபட்டு திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த திருமணத் தடைகளை நீக்கி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வழிவகை செய்யும் ஹோமமே சுயம்வர கலா பார்வதி ஹோமம் ஆகும். இந்த ஹோமம் பார்வதி தேவியை வேண்டி செய்யப்படுவதாகும். அவ்வாறு செய்யப்படும் சுயம்வர கலா பார்வதி ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரம் பார்வதி தேவியே சிவபெருமானை போற்றி செய்தது என்றும், அந்த ஹோமத்தை செய்ததின் விளைவாக பார்வதி தேவி சிவபெருமானை மணந்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

எனவே திருமணம் ஆகாத பெணகள் அவர்களது திருமண தடங்கல்களை முழுமையாக நீக்கி அவர்களுக்கு நல்ல முறையில் உடனே திருமணம் நடப்பதற்காக இந்த ஹோமம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு கலசாபிஷேகமும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.

சந்தான கோபால யாகம் :

ஒரு திருமணத்தின் முக்கியத்துவம் குழந்தை பேருதான் ஆனால் சில தம்பதிகளுக்கு திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைப்பது இல்லை. இதனால் குடும்பத்தில் கணவன், மணைவிக்குள் ஒற்றுமை குறைதலும், மன கஷ்டங்களும், தம்பதிகள் பிரிந்து செல்வது போன்ற பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டு மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஒரு சில ஆண்களுக்கு ஏற்படுகிறது. சிலர் விவாஹ ரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

குழந்தை இன்மைக்கு பல கரணங்கள் இருக்கலாம். அத்தகைய தோஷங்கள் நிவர்த்தியாகி, தம்பதிகள் விரைவில் குழந்தை பாக்யம் பெற மஹாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் கிருஷ்ணரை வேண்டி செய்யப்படும் ஹோமமே சந்தான கோபல ஹோமம் ஆகும். குழந்தை வரம் தேடும் தம்பதிகள் இதில் பங்கேற்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசிகள் பெற்று குழந்தை வரம் பெறலாம்.

இத்தகைய விசேஷ ஹோமங்களில் பங்கேற்பவர்களுக்கு யக்ஞ்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி பிரசாதங்கள் வழங்க உள்ளார். இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன் மகிழ்ச்சியாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் பௌர்ணமியை முன்னிட்டி வருகிற 10.01.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீக்கும் கந்தர்வராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீக்கும் சுயம்வர கலாபார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் வேண்டி சந்தான கோபால யாகம் எனும் முத்தான மூன்று ஹோமங்கள் கார்யசித்தி பெற நடைபெற உள்ளது.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

 



Leave a Comment