சூரிய கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை


பொதுவாக சூரிய கிரகணத்தின் போது சர்ப்ப கிரகங்களான ராகு - கேதுவின் விஷங்கள் ஒளிக்கதிர் மூலமாக வருவதாக ஐதீகம்.

எனவே கிரகண நேரங்களில் உணவு அருந்தக் கூடாது. 

அதேபோல நீராகாரங்கள், காபி, டீ போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளுதலும் தவறு.

கிரகண நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அப்படி செய்தால் தூங்குவது தான் வாழ்க்கையில் அதிகம் நீடிக்கும்.

அறிவியல் ரீதியாக ஒளிக்கற்றையில் கதிர் வீச்சுக்கள் இருக்கும் என்பதால் அது நல்ல பொருட்கள் மீது பட அசுத்தம் ஏற்பட்டுவிடும் என்பார்கள் அதனால் தான் கோயில்களை கூட அந்த நேரத்தில் பூட்டி விடுவார்கள். கிரகணம் முடிந்த பின்னர் சுத்தம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

தர்ப்பை புல்லுக்கு எதையும் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால் கிரகண நேரத்தில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உணவு பொருட்களின் மீது தர்ப்பை போட்டு வைப்பது நல்லது.

தர்ப்பை இருக்கும் காட்டிற்கு பாம்பு செல்லாது. தர்ப்பைக்கு விஷயத்தை முறியடிக்கக் கூடிய தன்மை உண்டு. இதனால் தண்ணீர் தொட்டிக்குள் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.



Leave a Comment