திருப்பதி கோவிலில் நடை அடைப்பு விபரம்
வரும் 25ம் தேதி நள்ளிரவு முதல் 26ம் தேதி மதியம் 2மணி வரை சூரிய கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, நடையை அடைப்பதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் காலை 8.08 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஏற்படுவதையொட்டி திருப்பதிக் கோயில் 13 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் 26-ம் தேதி பகல் 12 மணி வரை கோயிலின் நடை சாத்தப்படுகின்றது.
பிற்பகல் 2 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி கல்யாணோத்சவம்தூஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோத்சவம், வசந்தோத்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்னதானக்கூடமும் இயங்காதென்பதால் பக்தர்கள் இதற்கேற்ப தங்களின் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.
அதேபோல திருப்பதியில் ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி கோயிலை சுத்திகரிக்கும்விதமாக 'கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி' டிசம்பர் 31-ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுவதால், அன்றையதினத்துக்குரிய ஆர்ஜித சேவைகள் யாவும் ரத்து செய்யப்படுகின்றது எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Leave a Comment