ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு தயாராகும் 1,00,008 வடை 


மார்கழி திங்கள் அமாவாசை யன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் 25 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி. நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் 1,00,008 வடை மாலை சாத்தப்பட உள்ளது. அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 

ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு பால் மற்றும் பல் வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற உள்ளது. மதியம் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

 ஆஞ்சநேயர் க்கு  மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.   ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 28 பேர் வடையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

2250 கிலோ உளுந்த மாவு, 600 கிலோ நல்லெண்ணெய்,  36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 135 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் செவ்வாய் கிழமை  வடை தயாரிக்கும் பணிகள் நிறைவடையும்.



Leave a Comment