ராகவேந்திரா ஸ்வாமி மடத்தின் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு படி பூஜை
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தின் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு படி பூஜை செய்து பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி சுபேந்திர தீர்த்த சுவாமி, விசாக சாரதா பீடத்தின் உத்திராதி பீடாதிபதி ஸ்வத்மநானேந்திர சரஸ்வதி சுவாமி இணைந்து படி பூஜை தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய விசாக சாரதா பீடாதிபதி ஸ்வத்மநானேந்திர சரஸ்வதி சுவாமி எனது குரு சொரூபானந்த சுவாமியிடம் சன்னியாசம் பெற்ற பிறகு நாடு முழுவதும் இந்து தர்ம பிரச்சாரம் மற்றும் நமது கலாச்சார பண்பாடுகளை பாதுகாப்பதற்காக பிரச்சார யாத்திரை மேற்கொண்டு வருகிறேன்.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த யாத்திரை நிறைவு பெற்ற நிலையில் ஆந்திராவில் கர்நூல், கடப்பா, அனந்தபுரம் மாவட்டத்தில் நிறைவு பெற்று. தற்போது சித்தூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். இந்நிலையில் ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி சுபேந்திர தீர்த்த சுவாமி கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று படி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும் தாச சாகித்ய திட்டத்தின் பஜனை மண்டலி மூலம் ஆண்டில் நான்கு முறை படி பூஜை உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அது போன்று நின்று ராகவேந்திரா ஸ்வாமி மடத்தின் சார்பில் படி பூஜை நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராகவேந்திர சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அங்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. இது தவிர கோ சாலை போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது என அவர் பேசினார்.
Leave a Comment