திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை....
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முடிவுற்ற நிலையில் இன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது - 29 லட்சத்து78 ஆயிரம் காணிக்கை பணமாகவும், 175 கிராம் தங்கமும், 2 கிலோ 75கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளார்.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முடிவுற்ற நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
உண்டியல் காணிக்கையை அறநிலையத் துறை ஊழியர்கள், பொதுமக்கள், பக்தர்கள், குருகுல மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காணிக்கை எண்ணும் பணியினை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
உண்டியல் எண்ணும் பணி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி, கோவில் பேஷ்கார் தேவகி ஆகியோர் முன்னிலையில் இன்று காலை தொடங்கி மாலை முடிவுற்றது. இதில் சுப்ரமணியசுவாமி கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பணம், நாணயங்கள், தங்கம், வெள்ளி, மலேசியா நாணயம் போன்றவற்றை சேர்த்து பொதுமக்கள் பார்வையில் தரம் பிரிக்கப்பட்டது.
இதில் 172 கிராம் தங்கமும், 2.75 கிலோ வெள்ளியும், பணம் ரூ 29 லட்சத்து,78, ஆயிரத்து10 ருபாய் பணமும் மற்றும் மலேசியா கரன்சிகள் முதலானவை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். இதில் மலேசிய டாலர்கள் அதிக அளவில் பொதுமக்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.
Leave a Comment