கார்த்திகை கடைசி சோமவாரம் : சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம்.... 


கார்த்திகை கடைசி சோமவாரத்தை அடுத்து சிவாலயங்களில் இன்று சங்காபிஷகம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்.

கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று இந்த திங்கட்கிழமையில் சிவ ஆலயங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். இந்த நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பைச் சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும். சில கோயில்களில் 108 சங்காபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறாலாம். 
 



Leave a Comment