திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றம்....


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து மாலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர், சுவாமி சன்னதியில் இருந்து ஆடி அசைந்தபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் முடிந்த உடன், மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும்.

அதே நேரத்தில், அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள மலையில் சுமார் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கிரிவலப்பாதையில் காத்திருக்கும் பக்தர்கள் மலையின் மீது ஏற்றப்பட்டுள்ள மீகா தீபத்தை வணங்குவார்கள். 

மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னர், நாளை இரவு தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெறும். மகாதீபத்தை தொடர்ந்து அய்யங்குளத்தில் 4 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவதோடு கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடையும்.
 



Leave a Comment